News February 23, 2026
விழுப்புரம்: மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் இன்று (பிப்.23) பெற்றுக்கொண்டார். இதில் பல்வேறு மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Similar News
News February 28, 2026
விழுப்புரம்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<
News February 28, 2026
செஞ்சியில் திமுக சார்பில் போட்டியிட மு.அமைச்சரிடம் விருப்பமனு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில், நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட, மேல்மலையனூர் ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன் இன்று(பிப்.27) செஞ்சி திமுக அலுவலகத்தில், மு.அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் விருப்ப மனு அளித்தார். உடன் செஞ்சி ஒன்றிய பெருங்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News February 28, 2026
விழுப்புரத்தில் காவல்துறை அதிரடி !

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை பகுதியில் ஆரோவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நின்றிருந்த அய்யப்பன் (21), ரஞ்சித்குமார் (23) ஆகியோரைச் சோதனையிட்டதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த 25 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.


