News October 19, 2025

விழுப்புரம் மக்களே நாளை இதை மறவாதீர்!

image

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 21, 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சிக்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

விழுப்புரம்: கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

image

தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை குறித்து அதிரடி வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுச்சேரி மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த மீனா என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து 300 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 21, 2025

காரில் மதுபாட்டில் கடத்திய நபர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் போலீசார் இன்று வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 233 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!