News August 15, 2025
விழுப்புரம் மக்களே உஷாரா இருங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 35 நபர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இதில் 42 லட்சத்து 50,755 ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால், 0422-2300600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இந்த <
Similar News
News August 15, 2025
விழுப்புரம்: விமானப்படையில் சேர ஆசையா?

விழுப்புரம் இளைஞர்களே அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர ஆண்களுக்கு செப்.2,3 மற்றும் பெண்களுக்கு செப்.5,6 ஆகிய தேதிகள் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள ஏர்மேன் தேர்வு மையத்தில் நேரடி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஜன.2001-ஜூலை 2008க்குள் பிறந்தவர்களாகவும், 10,12th,டிப்ளோமோ முடித்தவர்களாகவும் திருமணம் ஆகாதவர்களாகவும் இருந்தால் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். <
News August 15, 2025
விழுப்புரம் இளைஞருக்கு சமூக சேவை விருது

விழுப்புரத்தை சேர்ந்த ‘மனிதம் காப்போம் குழு அறக்கட்டளையின்’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜாக் சந்துருக்கு 2025ம் ஆண்டிற்கான சமூக சேவை விருது வழங்கப்பட்டது. சென்னையில் இன்று நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்கி கௌரவித்தார். சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் மானியத்துடன் புல்நறுக்கும் இயந்திரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2025-2026 நிதியாண்டில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மின்சார புல் நறுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 150 பயனாளிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.