News August 12, 2025
விழுப்புரம் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க

▶️நகராட்சி- 3 (விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம்)
▶️பேரூராட்சிகள்- 7
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா- 9
▶️வருவாய் குறுவட்டம்- 34
▶️வருவாய் கிராமங்கள்-928
▶️ஊராட்சி ஒன்றியம்-13
▶️கிராம பஞ்சாயத்து-497
▶️MP தொகுதி-1 (விழுப்புரம்)
▶️MLA தொகுதி- 7
▶️மொத்த பரப்பளவு – 3725.54 ச.கி.மீ
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க
Similar News
News August 12, 2025
விழுப்புரம் பட்டதாரிகளுக்கு: நவம்பர் 1, 2-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்காக இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்களை www.trb.tn.gov.in ) இணையதளத்தின் தெரிந்து கொள்ளலாம்.
News August 12, 2025
விழுப்புரத்தில் பெரும் அதிர்ச்சி…

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி – ஜூன் வரை விழுப்புரத்தில் 7,936 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. உங்கள் பகுதியில் நாய் தொல்லை இருந்தால் உடனே விழுப்புரம் நகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். SHARE IT
News August 12, 2025
விழுப்புரத்தில் இன்று ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாரத்தில் டி.பி.ஆர் மஹால், வல்லம் வட்டாரத்தில் மேல்ஒலக்கூர் அரசு உயர்நிலை பள்ளி, கண்டமங்கலம் வட்டாரத்தில் குமுளம் சமுதாக கூடம், மரக்காணம் வட்டாரத்தில் என்.எம்.வி மண்டபம், ஒலக்கூர் வட்டாரத்தில் தாதாபுரம் அரசு உயர்நிலை பள்ளி, கோலியனூர் வட்டாரத்தில் கொண்டங்கி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஆகிய இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.