News September 27, 2025
விழுப்புரம் மக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விதிமுறைகளை மீறி, மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என மின்சாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரில்களில் அலங்கார சீரியல் விளக்குகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கக் கூடாது. மின் குறைகளுக்கு 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
திருவெண்ணைநல்லூர் அருகே மயான பாதை ஆட்சியர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சின்னசெவலை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சியில் மயானப்பாதை அமைப்பது தொடர்பாக ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.08) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இருந்தனர். விரைவில் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 8, 2026
விழுப்புரம்: சிக்கலை தீர்க்கும் சிங்கவரம் ரங்கநாதர்!

சிங்கவரம் உலகளந்த பெருமாள் கோயில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இந்த கோவிலில் ஆதிசேஷன் மீது அனந்த சயன நிலையில் ரங்கநாதர் பள்ளிகொண்டுள்ளார்.இங்கு திருமணத் தடைகள் நீங்கவும், துன்பங்கள் நீங்கி அமைதி பெறவும் பக்தர்கள் ரங்கநாதரை வழிபட்டு செல்கின்றனர்.மேலும், பக்தர்களுக்கு நீண்ட ஆயுள், மன நிம்மதி மற்றும் சௌபாக்கியங்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஷேர் செய்யவும்
News January 8, 2026
விழுப்புரம்:இனி அனைத்து சான்றிதழ்களும் ஒரே CLICK-ல்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக<


