News December 4, 2025
விழுப்புரம்: மகளிருக்கு ரூ.10 லட்சம் கடன் – ஆட்சியர் அறிவிப்பு!

தமிழக அரசின் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்படி, மகளிர் மற்றும் திருநங்கையர்கள் தொழில் துவங்கிட, ரூ.10 லட்சம் வரை பிணையில்லா வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்தொகையில், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம், அரசு மானிய உதவி வழங்கப்படும். தொழில்முனைவோராக ஆர்வமுள்ள மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிப்பக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
விழுப்புரம் மக்களே நீண்ட ஆயுள் பெற இந்த கோவிலுக்கு போங்க!

விக்கிரவாண்டி அகஸ்தீஸ்வரர் கோயில் தொன்மையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தத கோவில் ஆகும். இந்த கோவிலில் மூலவர் அகஸ்தீஸ்வரர், தாயார் தர்மசவர்த்தினி அருள்கின்றனர். இங்கு வந்து பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அத்துடன், திருமணத் தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.
News December 4, 2025
மாரத்தான்: பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.
News December 4, 2025
விழுப்புரம் எய்ட்ஸ் விழிப்புணர்வில் கலந்து கொண்ட ஆட்சியர்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அதில் ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டார்.பின்னர், இன்று (டிச.04) எய்ட்ஸ் விழிப்புணர்வு போஸ்டர்களை ஆட்டோவில் ஒட்டினார்.


