News October 13, 2025
விழுப்புரம்: பெற்றத் தந்தைக்கு எமனாகிய மகன்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் ஒடுவன்குப்பம் கிராமத்தில் இன்று அதிகாலையில் வயதான முதியவர் தனது மகனால் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த போது இருவருக்கும் சொத்து தகராறு இருந்து உள்ளது. பின்னர் டிராக்டர் ஏற்றி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இது குறித்து போலிஸ்சார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்த நபரை விரைவில் கைது செய்யப்படுவார்.
Similar News
News October 13, 2025
விழுப்புரம்: 12th போதும், ராணுவத்தில் வேலை!

விழுப்புரம் மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் காலியாக உள்ள 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 13, 2025
திண்டிவனம்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏந்துார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் மகன் வரதராஜன் (22) ஹிட்டாச்சி ஆப்ரேட்டர். இவர், கடந்த ஜூலை மாதம் 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், திண்டிவனம் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து வரதராஜனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News October 13, 2025
விழுப்புரம்: தங்க நகை திருட்டு: இளைஞர் கைது

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் சாஸ்தா நகர் பகுதியில் உள்ள முனியம்மாள் என்பவர் வீட்டில், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை, போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 1/2 சவரன் தங்க நகைகளை கைப்பற்றப்பட்டது.