News December 14, 2025

விழுப்புரம் பெண்களே.. நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

தமிழக அரசு, பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 2, 2026

விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

விழுப்புரம்: விசிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

image

வானூர் வட்டம் நெமிலி, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அதிமுக, தவெக மற்றும் நா.த.க.வைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், நேற்று (மார்.01) வானூர் விசிக செயலாளர் பொன்னிவளவன் முன்னிலையில் அக்கட்சியில் இருந்து விலகி விசிகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் விசிகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து, உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. உடன் விசிக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News March 2, 2026

விக்கிரவாண்டியில் துடிதுடித்து பலி!

image

விக்கிரவாண்டி: மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (49). இவர் நேற்று காலை தனது பைக்கில் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். செஞ்சி அடுத்த பரதன் தாங்கல் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் திடீரென கோவிந்தசாமி பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!