News November 10, 2025

விழுப்புரம்: பெண்களுக்கு முக்கியமான APP!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வரும் நிலையில், அனைத்து பெண்களிடத்திலும் அரசின் ‘காவல் உதவி’செயலி இருப்பது அவசியம். இதன் மூலம், அவசர எச்சரிக்கை, இருப்பிடம் பகிர்வு, அவசர புகார் போன்றவைகளை விரைவில் செய்ய முடியும். <>இங்கே<<>> கிளிக் செய்து பதிவிறக்கம் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 10, 2025

விழுப்புரம்: குளத்தில் மூழ்கி இளைஞர் பலி!

image

விழுப்புரம்: வானூர் வட்டம், குயிலாப்பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்த மு.தமிழ்பிரியன்(28). திருமணமாகாத இவர், கொடைக்கானலில் தனியார் விடுதியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தமிழ்பிரியன் கடந்த சனிக்கிழமை அங்குள்ள குளத்தில் குளித்துள்ளார். அப்போது குளத்தின் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 10, 2025

விழுப்புரம்: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

விழுப்புரம்: தகராறு செய்த இளைஞர் மீது குண்டாஸ்!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீடூர் அணை பகுதியில் கடந்த மாதம் 14ஆம் தேதி ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களை தாக்கிய வீடூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில்
நேற்று(நவ.9) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!