News January 3, 2026
விழுப்புரம்: பெண்களிடம் குடிமகன் தகராறு!

செஞ்சி அருகே நேற்று ஒரு வீட்டு வாசலில், லோகேஷ் (23) போதையில் படுத்திருந்தார். அவரை அங்கிருந்து போகும் படி, அந்த வீட்டின் பெண்கள் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் கம்பியால் தன்னை குத்தி காயப்படுத்திக்கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கிராம பெண்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதும் கலைந்து சென்றனர்.
Similar News
News January 23, 2026
திண்டிவனம் அருகே தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம்; திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவரின் னைவி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சரவணனின் தாயார் அஞ்சம்மாள் கடந்த 10 நாட்களுக்கு முன் இறந்தார். இதனால் மனமுடைந்த சரவணன் நேற்று(ஜன.22) பிற்பகல் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 23, 2026
விழுப்புரம்: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

விழுப்புரம் மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News January 23, 2026
விழுப்புரம்: விழிப்புணர்வு மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று ஜன.22 திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன்,மாதிரி வாக்கு செலுத்தும் முறையை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.


