News March 24, 2025
விழுப்புரம்: புளியமரத்தில் லாபம் பார்க்கும் விவசாயி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் குத்தம் பூண்டி கிராமத்தில் செந்தில் குமார் என்ற விவசாயி இதுவரையிலும் தோட்டக்கால் பயிர் மட்டும் செய்து வந்தார். செந்தில் குமார் புது முயற்சியாக ஹைப்ரெட் வகையான மூன்று வருடங்களில் காய் காய்க்கும் புளியங்கன்றுகளை விவசாயம் செய்து நல்ல லாபம் பெறுவதாக கூறுகின்றார். இதுவரையிலும் இந்த பகுதியில் இந்த விவசாயம் யாரும் செய்ததில்லை என குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 23, 2025
விழுப்புரத்தில் மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்தடை என்று மின்சார வாரியத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, புதுப்பாளையம் மற்றும் மேலும் பல பகுதிகளில் இன்று மின்தடை இருக்கும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 23, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

விழுப்புரம் மாவட்டம் நாளை செப். 24 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்
1.திண்டிவனம் நகராட்சி DKP திருமண மஹால்
2.விக்கிரவாண்டி வட்டாரம் முருகன் அடிகளார் மஹால் இராதாபுரம்
3.செஞ்சி வட்டாரம் பகிரதன் மஹால் வரிக்கல்
4. முகையூர் வட்டாரம் அரசு பள்ளி வளாகம் ஆற்காடு
5.கோலியனூர் வட்டாரம் விஷ்ணு மஹால் பில்லூர்
6.வானூர் வட்டாரம் சமுதாய கூடம் புதுரை
பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News September 23, 2025
விழுப்புரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த லிங்கில் <