News January 30, 2026
விழுப்புரம்: பிப்.1-இல் மதுக்கடைகள் மூடல்

வள்ளலார் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விதிகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைப் பேணவும், வள்ளலார் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 31, 2026
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

விழுப்புரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 31, 2026
திண்டிவனத்தில் போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது!

திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த கப்பை கிராமத்தைச் சேர்ந்த அன்புசெல்வன் (24) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவரிடம் போதை தரக்கூடிய 100 மாத்திரைகள், 2 சோடியம் குளோரைடு பாட்டில்கள் மற்றும் 5 ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த திண்டிவனம் போலீசார், வாலிபரைக் கைது செய்தனர்.
News January 31, 2026
விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


