News December 28, 2025
விழுப்புரம்: பாத்திர வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை!

விழுப்புரம்: சு.கொள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் சத்தியராஜ் (30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது வீட்டை பூட்டி விட்டு பாத்திர வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது தங்க மோதிரம், வளையல்கள், பிரேஸ்லெட் என 5 பவுன் நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
விழுப்புரம்:உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை SHARE பண்ணுங்க…
News December 29, 2025
விழுப்புரம்: நாளை இந்த பகுதிகளில் மின்தடை!

அரசூர், காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையத்தில் நாளை(டிச.30) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசூர், சேமங்கலம், பேரங்கியூர், தென்மங்கலம், ஆலங்குப்பம், குமாரபாளையம், இருவேல்பட்டு,கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், அரும்பட்டு போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 29, 2025
விழுப்புரம்:தாய் சொன்ன வார்த்தையால் மகள் விபரீதம்!

விக்கிரவாண்டி அருகே உள்ள கீழக்கொண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், இவரது மகள் சுபாஸ்ரீ (17) சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.தற்போது, அரையாண்டு விடுமுறை என்பதால் அவரது தாய் சாந்தி வீட்டு வேலை செய் என்று கூறியதால், மனமுடைந்த மாணவி சுபாஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


