News January 7, 2026
விழுப்புரம்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04146-259216 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 10, 2026
விழுப்புரம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

காணை அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி(27). இவர், பி.எஸ்.சி படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நீண்ட நாட்களாக இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், மன உலைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காணை போலீசார் வழக்கு ஒஅதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 10, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

வி.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர், புதுச்சேரி மாநிலம், திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், இவர் தனது பைக்கில் சென்னை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது. நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதினார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 10, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


