News December 31, 2025

விழுப்புரம்: பஸ் டயரில் சிக்கி மூதாட்டி பலி!

image

மரக்காணம் அடுத்த கோமுட்டிச்சாவடி குப்பத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி செந்தாமரை (70). இவர், அனுமந்தை இ.சி.ஆர்., ஓரத்தில் கொட்டகை அமைத்து மீன் விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து மீன் கடையில் புகுந்தது. இதில் செந்தாமரை பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 22, 2026

விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஜன.30-ஆம் தேதி வரை படிவங்களை அளிக்கலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். ஆகையால், பெயர் சேர்க்கப்படாத நபர்கள் உடனடியாக தங்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்து, படிவங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News January 22, 2026

விழுப்புரம்: திருமணமான புதுப்பெண் தற்கொலை!

image

கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. ஆங்கில பட்டதாரியான இவர் புதுச்சேரியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, தந்தை வீட்டுக்குச் சென்ற பிரியங்கா, நேற்று(ஜன.21) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News January 22, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
(DSP) C. ராமலிங்கம் (DCB/VPM) தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரவு பாதுகாப்பிற்காக ரோந்து பணி நடைபெறுகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தொடர்பு எண்கள் பயன்படுத்தலாம்.

error: Content is protected !!