News January 11, 2026
விழுப்புரம்: பல்லவர்கள் கட்டிய முதல் கோயில் எது தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு எனும் ஊரில் உள்ளது திருமூர்த்தி கோயில். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட இந்த கோயிலே பல்லவர்களின் முதல் குடைவரை கோயிலாக உள்ளது. கோயில் கட்டுமானத்தில் மலையை குடைந்து குடைவரை கோயில் அமைக்கும் முறையில் பெயர் போனவர்கள் பல்லவர்கள். அவர்கள் கட்டிய முதல் கோயில் என்பது இதன் சிறப்பு. விழுப்புரம் மாவட்ட பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News January 25, 2026
விழுப்புரம் அருகே கொடூர விபத்து!

திண்டிவனம் வட்டம், அகூர், புது காலனி, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சு.ரவிச்சந்திரன்(55) இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவி சுமதி மகள் சுபாஷினி ஆகியோருடன் பைக்கில் அகூர் அருகே சென்றார். அப்போது அங்கு வந்த தனியார் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சுமதி உயிரிழந்த நிலையில் வெள்ளி மேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 25, 2026
விழுப்புரம்: இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
News January 25, 2026
விழுப்புரம்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

விழுப்புரம் மக்களே,அதிக மின் கட்டணம், மின்தடை,மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <


