News October 12, 2025
விழுப்புரம்: பனைமரத்தில் இடி விழுந்து தீ விபத்து!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், ரெட்டணை பேரூரில் பழைய காலணி அருகே அதிகளவில் பனைமரங்கள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று (அக்.11) மாலை 6 மணியளவில் இடியுடன் மழை பெய்தது. அப்போது, ஒரு பனைமரத்தில் இடி விழுந்து தீப்பற்றியது. இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
Similar News
News October 12, 2025
விழுப்புரம்: இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியில் உள்ள 171 சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க நாளை (அக்.13) கடைசிநாளாகும். இதற்கு B.Tech/B.E, Post Graduate, M.Sc, MBA,MCA, போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிறவர்கள் https://indianbank.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்.SHAREit
News October 12, 2025
விழுப்புரம்: GPay, PhonePe யூஸ் பண்றீங்களா?

மக்களே G Pay / PhonePe / Paytm பயன்படுத்தும் போது யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். முதலில் https://www.npci.org.in/upi-complaint என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும்.பின்னர் அந்த பக்கத்தில் உள்ள புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், மொபைல் எண் போன்றவற்றை கொடுத்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது.SHARE பண்ணுங்க!
News October 12, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.