News October 3, 2025
விழுப்புரம்: பண்டிகைக்கு லீவு தரலையா?

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் படி ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறை தினங்களில் ஒவ்வொரு நிறுவனமும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். விடுமுறை தினத்தில் வேலை செய்தால் அதற்கு ஈடாக மாற்று தின விடுப்பு (அ) இரட்டிப்பு சம்பளம் தர வேண்டும். இவை தரவில்லை என்றாலோ (அ) சம்பளத்துடன் விடுப்பு தரவில்லை என்றாலோ மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 3, 2025
திண்டிவனத்தில் மாரத்தான் போட்டி

திண்டிவனத்தில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 5ம் தேதி காலை 6 மணியளவில் சீனியர், ஜூனியர் இரு பிரிவுகளில் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். சீனியர் பிரிவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் ,ஜூனியர் பிரிவு 10-15 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News October 3, 2025
விழுப்புரம் மக்களே இந்த நம்பர் இருக்கா?

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதவி தேவைப்படுவோர் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு சிறப்பு சேவை துறை அலுவலகத்திற்கு தொலைபேசி எண் 04146 299659 மற்றும் அவசர உதவிக்கு 1098 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குழந்தைகள் பரிதவிப்பு குறித்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
News October 3, 2025
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். (SHARE பண்ணுங்க)