News October 23, 2024

விழுப்புரம்: பணத்தை இழந்தவர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு 

image

ஒரத்தூர் நன்னாடு, பேரணி, கூட்டேரிப்பட்டு, முண்டியம்பாக்கம், ஆகிய ஊர்களில் கடந்த வருடம் தீபாவளி சீட்டு நடத்தி முறையாக பணம் தராமல் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க ஒரு வருடம் முன்பு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று மீண்டும் மனு அளிக்க வந்த சீட்டு கட்டி ஏமாந்த கிராம பெண்கள் தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர கோரிக்கை விடுத்தனர்

Similar News

News August 18, 2025

விழுப்புரத்துல இது தாங்க செம்ம Famous

image

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தனித்துவமான உணவு பிரபலமாக இருக்கும். அந்த வகையில் விழுப்புரம் என்றாலே அது முட்டை மிட்டாய் தான். இது ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. பால், முட்டை, சர்க்கரை, நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் முட்டை மிட்டாய் கேக்-ஐ விட மென்மையாகவும் வாயில் வைத்தவுடன் கரையும் தன்மையுடனும் இருக்கும். விழுப்புரத்தில் இருந்து கொண்டு, இது வரை முட்டை முட்டையை சாப்பிடாத உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 18, 2025

விழுப்புரம்: அரசுப் பேருந்து மோதி ஐடி ஊழியர் பலி

image

சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (22), விடுமுறைக்காக பைக்கில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன

News August 18, 2025

விழுப்புரம்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!