News December 27, 2025
விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 28, 2025
விழுப்புரத்தில் மாடு வளர்ப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விலங்கின நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நாளை (டிச.29) தொடங்குகிறது. விழுப்புரம் கோட்டத்தில் 2.14 லட்சம் கால்நடைகளுக்கும், திண்டிவனம் கோட்டத்தில் 2.39 லட்சம் கால்நடைகளுக்கும் என மொத்தமாக 4.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் நடத்தப்படும் என அறிவிப்பு.
News December 28, 2025
விழுப்புரம்: பாத்திர வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை!

விழுப்புரம்: சு.கொள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் சத்தியராஜ் (30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது வீட்டை பூட்டி விட்டு பாத்திர வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது தங்க மோதிரம், வளையல்கள், பிரேஸ்லெட் என 5 பவுன் நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


