News September 11, 2025

விழுப்புரம்: நொடியில் நேர்ந்த சோகம்

image

விழுப்புரம் கோலியனூரான் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் ராதா(40). விழுப்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவா் நேற்று காலை பள்ளிக்கு பணிக்கு சென்றபோது வழியில் மயங்கி கீழே விழுந்தார். பொதுமக்கள் மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 11, 2025

விழுப்புரம்: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

image

விழுப்புரம் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

அன்புமணி நீக்கம் – ராமதாஸ் விளக்கம்

image

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் படி, அக்கட்சிக்கு எதிராக செயல்பட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அவர் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கும் அன்புமணி எந்த பதிலும் அளிக்காததால், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாகவே கருதப்பட்டு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்

News September 11, 2025

ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து அன்புமணி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பானது வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!