News August 23, 2025
விழுப்புரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News August 23, 2025
விழுப்புரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணியில் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்களிடம் கலந்தாய்வு நடைபெற்றது இதில் துறை அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்
News August 23, 2025
விழுப்புரம்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 23, 2025
அய்யன்கோவிலைட்டில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு.

விழுப்புரம் அருகே உள்ள அய்யன்கோவிலைட்டு கிராமத்தில் 25 மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்கள், விநாயகர் சதுர்த்திக்காக காகிதக் கூழ் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர். 2 அடி முதல் 12 அடி உயரம் கொண்ட இந்தச் சிலைகள், மும்பை மாடல், கற்பக விநாயகர், ராஜ கணபதி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உருவாகின்றன. ₹1,000 – ₹23,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்தச் சிலைகள், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.