News March 24, 2024

விழுப்புரம்: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, விழுப்புரத்தில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

விழுப்புரம்: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் விழுப்புரம் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04146-223628 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

விழுப்புரம் அருகே மடக்கி பிடித்த காவல்துறையினர்!

image

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கூட்டுரோட்டில் கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் சிவானந்தம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து நடத்திய சோதனையில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

News January 26, 2026

விழுப்புரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று (ஜன.26) குடியரசு தினவிழாற்கு மாவட்ட விளையாட்டு ஆணையம் மைதானத்தில் திட்டமிடப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் பாராட்டு நற்சான்றுகளை கொடி ஏற்றுவதற்கு முன்னரே காலை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

error: Content is protected !!