News January 11, 2026

விழுப்புரம்: திருமண நாளன்று இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

image

விழுப்புரம்: மகாராஜபுரத்தை சேர்ந்த டேவிட், அதேபகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருடைய மகன் ஜோப் ஜெசூரன் (32). இவர் தனது திருமண நாளான நேற்று, பைக்கில் விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனை அழைத்துச் செல்லும் பாதி வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

image

இந்தியாவில் 77 வது குடியரசு தினம் நாளை (ஜன.25) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி இந்தியா முழுவதும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் போலீசார் விழா நடைபெறும் இடம், மற்றும் மக்கள் கூடும் இடங்களான ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிலையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 25, 2026

விழுப்புரம்: விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

image

விழுப்புரம் விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்பு செட் மானியத் திட்டம்,தற்போது அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது.இதில்,விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர்,வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

விழுப்புரம் அருகே கொடூர விபத்து!

image

திண்டிவனம் வட்டம், அகூர், புது காலனி, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சு.ரவிச்சந்திரன்(55) இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவி சுமதி மகள் சுபாஷினி ஆகியோருடன் பைக்கில் அகூர் அருகே சென்றார். அப்போது அங்கு வந்த தனியார் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சுமதி உயிரிழந்த நிலையில் வெள்ளி மேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!