News September 5, 2025
விழுப்புரம்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
▶️ இந்தியன் ஆயில்: 18002333555
▶️ பாரத் பெட்ரோல்: 1800224344
▶️ HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
Similar News
News September 5, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைக்குமாறு அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அதன் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனத் தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், இதனைத் தடுக்க இயற்கை பூச்சி விரட்டிகள் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
News September 5, 2025
விழுப்புரத்தில் பள்ளி மாணவி சாதனை ஆட்சியர் பாராட்டு

விழுப்புரம் ஜெயந்திரா சரஸ்வதி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி குனவதி, கைப்பந்து போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கி, தேசிய அளவிலும் பங்கேற்றுள்ளார். இவரது திறமையை பாராட்டி பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் பரிசளித்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.