News November 23, 2025
விழுப்புரம்: தனிக்குடித்தனம் சென்ற மகன்- தாய் தற்கொலை!

விழுப்புரம்: துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி தனலட்சுமி (55). இவர்களது மகன் சரவணன் தனிக்குடித்தனம் போகிறேன் எனக்கூறியதால் தனலட்சுமி மனமுடைந்து பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே தனலட்சுமி உயிரிழந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
Similar News
News January 31, 2026
விழுப்புரம்: திருமண தடை நீங்க இங்கு போங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேலக்கொண்டூரில் பட்டாபிராமர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயில் வந்து பெருமாள் மற்றும் அம்மனை தரிசிப்பதின் வழியே வியாபாரத்தில் தொடர் நஷடம் இருந்தால், வியாபாரம் மேன்மை அடையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் பல வருட திருமண தடை நீங்கும் என்பதும் ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
News January 31, 2026
விழுப்புரம் வழியாக பிப்ரவரி மாத சிறப்பு ரயில்கள்

விழுப்புரம் வழியாக ஹசூர் சாகிப்- திருச்சி – ஹசூர் சாகிப் பிப்ரவரி மாத சிறப்பு ரயில். வண்டி எண்: 07615 / 07616. இது பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் & புதன் கிழமையில் இயங்கும். இது திருச்சி விழுப்புரம் திருக்கோவிலூர் திருப்பதி நெல்லூர் ஓங்கோல் தெனாலி குண்டூர் வழியாக சார்லபள்ளி, ஹசூர் சாகிப் செல்கிறது. மறு மார்கத்தில் இதே வழியில் வரும். இதற்கான முன்பதிவு இன்று (31.01.26) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
News January 31, 2026
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

விழுப்புரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


