News March 31, 2024
விழுப்புரம்: டிராக்டர் மோதி முதியவர் உயிரிழப்பு

செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (55), விவசாயி. நேற்று நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இருந்து கடலாடி குப்பத்திற்கு சைக்கிளில் (மார்ச்.30) சென்று கொண்டிருந்தார். அப்போது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் நிலை தடுமாறி டிராக்டர் டிரைலர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது
குறித்து நல்லான் பிள்ளைபெற்றாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
இது இல்லைனா அபராதம் தான்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே. 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 20, 2025
விழுப்புரம் மாவட்ட வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க

திருவெண்ணெய்நல்லூர்-04153-290893, கண்டாச்சிபுரம்-04153-231666, மேல்மலையனூர்-9942248808, 04145-234209, மரக்காணம்-9445461915, 04147-239449, விக்கிரவாண்டி-9445461837, 04146-233132, வட்டாட்சியர், வானூர்-9445000526, 0413-2677391, விழுப்புரம்-9445000525, 04146-222554, செஞ்சி-9445000524, 04145-222007, திண்டிவனம்-9445000523, 04147-222090. *
News April 20, 2025
விழுப்புரம்: கடன் தொல்லை நீங்கி செழிப்பாக வேண்டுமா?

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் காப்பவர் குபேரன். இவ்விருவரும் அருள்பாலிக்கும் மகாலட்சுமி குபேரர் கோவில், விழுப்புரம் அருகே திருநகரில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் பௌர்ணமி, அமாவாசையில் மகாலட்சுமி மற்றும் குபேரனுக்கு பூஜை செய்தால் போதும், உங்கள் வாழ்வில் கடன் நீங்கி செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம். *நண்பர்களுக்கும் கடனை தீர்க்கும் லட்சுமி குபேரரை தெரியப்படுத்துங்கள்*