News October 21, 2025

விழுப்புரம்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 20, 2026

விழுப்புரம்: தூக்கில் தொங்கிய பெண்!

image

மோனிஷா சிங்கப்பெருமாள்கோயிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நெடுங்கல் கிராமத்தில் கணவர் வீட்டில் இருந்து வந்த மோனிஷாவிடம் மாமனார் விநாகயம், மாமியார் காஞ்சனா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் ரூ.1 லட்சம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டனர். இதனால், திண்டிவனம் சலவாதியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த மோனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

News February 20, 2026

விழுப்புரம்: டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து

image

விழுப்புரம், பாலப்பட்டு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விறகுகளை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. திண்டிவனத்திலிருந்து நேற்று விறகுகளை ஏற்றுக்கொண்டு டிராக்டர் விக்கிரவாண்டி நோக்கி சென்றது. இதில் விபத்தில் காயமடைந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

News February 20, 2026

விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ள செய்திக் குறிப்பில், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கயிலில், நாளை (21.02.2026) அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு (21.02.2026) (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!