News December 25, 2025

விழுப்புரம்: சாப்பாடு பரிமாறிய நபருக்கு அடி உதை!

image

விழுப்புரம்: அய்யனம்பாளையத்தைச் சேர்ந்த அருள்குமார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி விழாவில் உணவு பரிமாறியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், ஸ்ரீமன் ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், அவர்கள் 2 பேரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அருள்குமார் போலீசார் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

Similar News

News January 25, 2026

விழுப்புரம்: விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

image

விழுப்புரம் விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்பு செட் மானியத் திட்டம்,தற்போது அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது.இதில்,விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர்,வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

விழுப்புரம் அருகே கொடூர விபத்து!

image

திண்டிவனம் வட்டம், அகூர், புது காலனி, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சு.ரவிச்சந்திரன்(55) இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவி சுமதி மகள் சுபாஷினி ஆகியோருடன் பைக்கில் அகூர் அருகே சென்றார். அப்போது அங்கு வந்த தனியார் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சுமதி உயிரிழந்த நிலையில் வெள்ளி மேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 25, 2026

விழுப்புரம்: இளைஞர்களே செம வாய்ப்பு..!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

error: Content is protected !!