News January 27, 2026

விழுப்புரம்: சரக்கு வாகனம் திருட்டு

image

விழுப்புரம் அருகே உள்ள லிங்கா ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர் பல்லியனெலினூர் ரயில்வே கேட் கீப்பராக வேலை செய்து வருகிறார். இவருடைய சரக்கு வாகனம் அங்கே நிறுத்தி பூட்டி விட்டு சென்றுள்ளார். மீண்டும் மறுநாள் வந்து பார்த்தபோது அந்த வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 2, 2026

திண்டிவனத்தில் அதிரடி கைது!

image

விழுப்புரம்: திண்டிவனம் ரோசனை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம், சங்கர், முருகன், பன்னீர்செல்வம், வாசுதேவன், செல்வராஜ், பாஸ்கரன் ஆகிய ஏழு பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

News February 2, 2026

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் த.தமிழ்வாணன் (40), தனியாா் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைப் பாா்த்து வந்தாா். அய்யூர், அகரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்புக் கட்டையில் மோதியதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 2, 2026

விழுப்புரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

கடலூரைச் சேர்ந்தவர் ஜெசிப்பிரியா(22). இவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த வசந்தராஜ்(25) என்பவருக்கும் கல்லூரியில் காதல் மலர்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இருவருக்குமிடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று(பிப்.1) மாலை, ஜெசிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!