News November 17, 2025
விழுப்புரம்: கை துண்டாகி கிடந்த நபர்!

விழுப்புரம்: பானாம்பட்டை சேர்ந்வர் அசோக். இவர், நேற்று (நவ.16) அங்குள்ள ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ரயில், அவர் மீது மோதியது. இதில், அசோக் இடது கை துண்டாகி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Similar News
News November 17, 2025
விழுப்புரம்: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

விழுப்புரம்: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News November 17, 2025
விழுப்புரத்திற்கு மஞ்சள் அலெர்ட்! பள்ளிக்கு விடுமுறையா?

விழுப்புரத்தில் இன்று (நவ.17) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், விழுப்புரத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் விழுப்புரத்தில் மழையின் தாண்டவத்தை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 16, 2025
பட்டனூர்: SIR பணிகளை ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டம் பட்டானூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு செய்யும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்குப்பதிவு அலுவலர் வித்தியாதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


