News August 5, 2025
விழுப்புரம் குடோன் ஆய்வில் 27 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மாயம்

விழுப்புரம் மாவட்ட டாஸ்மார்க் குடோனில், சமீப காலமாக மது பாட்டில்கள் மாயமானதாக எழுந்த புகாரில் அடிப்படையில் இன்று சென்னை அதிகாரி குழுக்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையை விட 27 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் மாயமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தத் தொகையை அரசுக்கு, மாவட்ட அதிகாரிகள் அபராதமாக செலுத்த வேண்டும் என ஆய்வு குழுவினர் உத்தரவிட்டனர்.
Similar News
News August 6, 2025
விழுப்புரம் மாவட்ட மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக முகையூரில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிடார் பகுதியில் 43 மி.மீ., விழுப்புரம் 38 மி.மீ., அரசூர் 37 மி.மீ., மரக்காணம் 30 மி.மீ., வல்லம் 25 மி.மீ., வானூர் 15 மி.மீ., திண்டிவனம் 14 மி.மீ. மற்றும் செஞ்சியில் 10 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
News August 6, 2025
விழுப்புரம்: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

விழுப்புரம் ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <
News August 6, 2025
இந்தியன் வங்கியில் யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியன் வங்கியின் அப்பரண்டிஸ் பயிற்சிக்கு 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.800, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும். வங்கியில் பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பு. வங்கி பணிக்கு செல்லும் கனவோடு தேர்வுக்கு தயாராகி வரும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க