News September 14, 2025
விழுப்புரம்: குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட விபரீதம்!

தி.வெ.நல்லூர் அடுத்த பல்லரிபாளையத்தை சேர்ந்தவர் குமார், மனைவி ராஜகுமாரி(27). குமார் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மன வருத்தத்தில் இருந்த ராஜகுமாரி, தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு கொண்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அவர் இறந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 14, 2025
விழுப்புரம்: ராமதாஸ், அன்புமணிக்கு தடை?

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் 8 மாதங்களாக நீடித்தது. இதையடுத்து, செப்.11ம் தேதி அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். வரும் செப்.17ம் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் தியாகிகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், நிகழ்ச்சிக்கு இருவருக்கும் தடைவிதிக்க திண்டிவனம் சார் ஆட்சியருக்கு டிஎஸ்பி பரிந்துரைத்துள்ளார்
News September 14, 2025
விழுப்புரம்: மண்ணெண்ணை குடித்த முதியவர் பலி

விழுப்புரம் வட்டம் தெளி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி(85). இவர் கடந்த, 10ம் தேதி வீட்டில் கவனக்குறைவாக குடிநீர் என நினைத்து, மண்ணெண்ணையை குடித்தார். மயங்கி விழுந்த அவரை மீட்டு, உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.13) காலை உயிரிழந்தார். இதுகுறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
விழுப்புரம்: 2586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்கு தீர்வு

விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (செப்.13) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் 2586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்கு, தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தனர். இதில் நீதிபதி மணிமொழி, சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.