News March 1, 2026
விழுப்புரம்: கிணற்றில் மிதந்த சடலம்!

மயிலம்:அவனம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (65), நேற்று வழக்கம்போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள வயல்வெளிக்கு ஓட்டிச்சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கிணற்றில் அவர் சடலமாக மிதந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 2, 2026
விழுப்புரம்: விசிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

வானூர் வட்டம் நெமிலி, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அதிமுக, தவெக மற்றும் நா.த.க.வைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், நேற்று (மார்.01) வானூர் விசிக செயலாளர் பொன்னிவளவன் முன்னிலையில் அக்கட்சியில் இருந்து விலகி விசிகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் விசிகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து, உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. உடன் விசிக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News March 2, 2026
விக்கிரவாண்டியில் துடிதுடித்து பலி!

விக்கிரவாண்டி: மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (49). இவர் நேற்று காலை தனது பைக்கில் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். செஞ்சி அடுத்த பரதன் தாங்கல் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் திடீரென கோவிந்தசாமி பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


