News March 20, 2025
விழுப்புரம்: கிணற்றில் மிதந்த சடலத்தால் பரபரப்பு

திண்டிவனம் அய்யந்தோப்பு கல்லூரி செல்லும் சாலையோரம் தனியார் ரைஸ்மில் அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ரோசணை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 20, 2025
இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 20, 2025
வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது – ராமதாஸ்

கிளியனூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது. முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு விலை நிலங்கள் பட்டாவாக மாற்றம் முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. ஏரி குளம் நீர்நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை கூறினார்.
News March 20, 2025
விழுப்புரத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.21) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடைபெற உள்ளது. வயது: 18 – 35 வயது வரை. கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, பொறியியல், ஐடிஐ, முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 என்ற தொலைபேசி எண்களில் அழைக்கவும். ஷேர் பண்ணுங்க