News October 21, 2025

விழுப்புரம்: கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

image

தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை குறித்து அதிரடி வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுச்சேரி மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த மீனா என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து 300 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

விழுப்புரத்தில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04146-259216) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

விழுப்புரம்: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் விழுப்புரம் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04146-223628 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

விழுப்புரம் அருகே மடக்கி பிடித்த காவல்துறையினர்!

image

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கூட்டுரோட்டில் கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் சிவானந்தம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து நடத்திய சோதனையில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!