News September 19, 2025
விழுப்புரம்: கண்டெய்னர் லாரி மோதி இளைஞர் பலி

விழுப்புரம்: அதனூர் கூட்ரோடு அருகே நேற்று (செப். 18) நடந்த சாலை விபத்தில், சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் தீனதயாளன் (27) உயிரிழந்தார். சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News March 3, 2026
விழுப்புரம்: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: <
News March 3, 2026
விழுப்புரம்: வாய்கால் தூர்வாறும் பணியை ஆட்சியர் ஆய்வு!

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் உள்ள வாய்கால் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீபிரியா உட்பட பலர் உள்ளனர்.
News March 3, 2026
விழுப்புரத்தில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

விழுப்புரம் பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு<


