News October 16, 2025
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 16, 2025
விழுப்புரம் எம்.பி வைத்த கோரிக்கை!

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த குரல் கொடுப்பதாக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
விழுப்புரம்: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள அஞ்சாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். வீட்டில் தனது தந்தை மற்றும் தாய் ஆகிய இருவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள இளைய மகன் வீட்டிற்கு இவர்கள் கடந்த 3ம் தேதி சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை & பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News October 16, 2025
விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் பொன்பத்தி ஏரி இருக்கிறது, இங்கு மின்னணு ஒப்பந்தபுள்ளி மூலம் மீன் பாசி குத்தகை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்த புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன் பாசி குத்தகை விடப்பட உள்ளன. மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.