News September 25, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.25) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️மனோன்மணி அம்மாள் திருமண மண்டபம், கோட்டக்குப்பம்
▶️அஞ்சுகம் திருமண மஹால், ஆண்ட்ராயனூர்
▶️நாடக மேடை வளாகம், கடலி
▶️ஊராட்சிமன்ற கட்டிட வளாகம், புலியனூர்
▶️முருகன் அடிகளார் திருமண மண்டபம், ராதாபுரம்
▶️ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகம், கஞ்சனூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
Similar News
News September 25, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 25, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு

முதலமைச்சரால் புதுமைபெண் தமிழ்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 25ம் தேதி மாலை 4 மணி முதல் அனைத்து கல்லூரி மாணவர்களையும் வண்ணத்திரை மூலமாக நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தயார் செய்திட விழுப்புரம் கலெக்டர் அறிவுறுத்தல்
News September 24, 2025
லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனம் என்பவர் பட்டா மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கியதால் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.