News November 10, 2025
விழுப்புரம்: இளைஞர் மீது குண்டாஸ்!

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்பக்காடு அருகே விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைமாற்றிய வழக்கில் மழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில் நேற்று(நவ.9) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News November 10, 2025
விழுப்புரம்: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News November 10, 2025
விழுப்புரம்: தகராறு செய்த இளைஞர் மீது குண்டாஸ்!

விழுப்புரம்: விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீடூர் அணை பகுதியில் கடந்த மாதம் 14ஆம் தேதி ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களை தாக்கிய வீடூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில்
நேற்று(நவ.9) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 9, 2025
விழுப்புரம்: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க


