News August 7, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஓர் அரிய வேலைவாய்ப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை மறுநாள் (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 7, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை சிறப்பா?

விழுப்புரம் மாவட்டத்தில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செஞ்சிக் கோட்டையை தெரிந்த பலருக்கும், இங்குள்ள சிறப்பு வாய்ந்த கோயில்கள் பற்றி தெரியவில்லை. சடையப்ப வள்ளல் பிறந்த ஊரான திருவெண்ணைநல்லூரில் உள்ள சிவன் கோயில், மண்டகப்பட்டில் மகேந்திரவர்மன் உருவாக்கிய குடைவரைக் கோயில், 8,000 சமணர்கள் வாழ்ந்த எண்ணாயிரத்தில் உள்ள கோயில் என பல உண்டு. புதுப்புது இடங்களுக்கு செல்ல விரும்பும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 7, 2025
ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று (ஆக.7 ) விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் திமுக மாவட்ட கழக பொருளாளர் இரா.ஜனகராஜ் , ஓய்வுபெற்ற காவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News August 7, 2025
சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ‘கல்வி கடன் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரகம், கூட்டுறவு வங்கி, மாவட்ட சிறுபான்மையின நல அலுவலர்கள் போன்ற இடங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.