News August 15, 2025

விழுப்புரம்: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 12, 2026

எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

image

விழுப்புரம்: செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பூண்டி கிராமத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆலம்பூண்டியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி வழங்கும் திட்டம் நடைபெற்றது. இதை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் மஸ்தான் வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவரும் ஒன்றிய செயலாளருமான ஆர்.விஜயகுமார், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

News March 12, 2026

விழுப்புரம்: ரயில் மோதி கொடூர பலி!

image

திருவென்ணெய்நல்லூர், ஆலங்குப்பம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை நேற்று(மார்ச் 11) இரவு 9 மணிக்கு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடக்க முயன்றார். அப்போது, ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே இருப்பு போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 12, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.11) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!