News December 19, 2025

விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2.) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News December 19, 2025

விழுப்புரம்: மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்,வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இன்று (டிச.19) துவக்கி வைத்தனர்.

News December 19, 2025

அன்னியூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு கலைக்கல்லூரி கட்டப்படவுள்ள இடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இன்று (டிச.19) நேரில் ஆய்வு செய்தார். தற்போது தற்காலிகமாக கல்லூரி அன்னியூர் அரசு பள்ளிக்கட்டித்தில் இயங்கி வருகின்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி உடனிருந்தனர்.

News December 19, 2025

JUST IN: விழுப்புரத்தில் 1.82 லட்சம் பேர் நீக்கம்

image

இன்று (டிச.19) விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் 1,82,865 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!