News December 28, 2025
விழுப்புரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
Similar News
News December 30, 2025
விழுப்புரம்: பேரூராட்சியை திணறடிக்கும் திருடர்கள்!

விழுப்புரம்: அரகண்டநல்லூர் பேரூராட்சியில் குடிநீர் மோட்டாருக்கு செல்லும் ரூ.1.5 லட்சம் தாமிர கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் குடிநீரின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தொடர்ந்து 8 முறை திருடிச் சென்றுள்ளதாக, பேரூராட்சி நிர்வாகம் போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருட்டு சம்பவம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
News December 30, 2025
விழுப்புரத்தில் மின்தடை.. இதில் உங்க ஏரியா இருக்கா?

விழுப்புரம் மாவட்டத்தில், அரசூர் மற்றும் காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையங்களில் இன்று (டிச.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர். ஆயந்தூர், ஆலம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
விழுப்புரம்: 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்த ரோசா (35), தனது 3 குழந்தைகளுடன் கணவரின்றி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவர் சொத்துக்களை மாமனார், மாமியார் அபகரித்துவிட்டதாக நேற்று தனது குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரை சமாதானம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


