News September 4, 2025
விழுப்புரம்: இருசக்கர வாகனத்தில் மது கடத்தியவர் கைது

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு, இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News September 11, 2025
விழுப்புரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 10, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
விழுப்புரம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

விழுப்புரம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <