News September 21, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.20 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 20, 2025

முதலமைச்சர் நிதி உதவி அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், அய்யூர் அகரம் பாலம் அருகே, இன்று காலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

News September 20, 2025

திண்டிவனத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

திண்டிவனத்தில் உள்ள ஏ. கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை, நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. எம்.எல்.ஏ. மஸ்தான் இந்த முகாமைத் தொடங்கி வைத்து, மருத்துவ முகாமின் சேவைகளை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றனர்.

News September 20, 2025

புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

image

முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொளி காட்சி வாயிலாகப் பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி முன்னிலையில், புதிதாகக் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறக்கப்பட்டது. இவ்விழாவில், ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் சிறப்புரையாற்றினர்.

error: Content is protected !!