News December 31, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.31) காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தேவைப்படுவோருக்கு ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 1, 2026
விழுப்புரத்தில் அரை டன் போதைப்பொருள் பறிமுதல்!

பெங்களூருவிலிருந்து புதுச்சேரிக்கு, விழுப்புரம் வழியாக காரில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 405 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
News January 1, 2026
விழுப்புரத்தில் 339 பேர் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டத்தில் 489 கொள்ளை, 21 வழிப்பறி, 468 திருட்டு என மொத்தம் 978 குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 20 ஆயிரத்து 545 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர 32 கொலை வழக்குகளில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News January 1, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.31) இரவு முதல் இன்று (ஜன.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


