News March 26, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News March 30, 2025

விழுப்புரம் விவசாயிகள் கவனத்திற்கு 

image

விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம் கிசான் ஊக்கத்தொகை பெறும் 89,958 விவசாயிகளில் தற்போது வரை 50,404 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 39,554 விவசாயிகள் ஏப்ரல் -8 ஆம் தேதிக்குள் தனி அடையாள எண் பெற வேண்டும், அப்போதுதான்  பி.எம் கிசான் ஊக்கத்தொகை  தொடர்ந்து பெற முடியும்  என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <>ஷேர் <<>>செய்யுங்கள்

News March 30, 2025

இயற்கை உபாதை கழிக்க சென்றவர் உயிரிழப்பு

image

திண்டிவனம் அடுத்த தளவாய் கிராமத்தைச் சேர்ந்த பரணி (19), நேற்று முந்தினம் (மார்ச் 28) காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார். ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ரயில் அவர் மீது பலமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!