News December 18, 2025
விழுப்புரம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

விழுப்புரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Similar News
News December 27, 2025
விழுப்புரத்தில் 587 பேர் பலி!

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இதுவரை, மொத்தம் 2,732 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 587 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,183 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சற்று குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026ல் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
News December 27, 2025
விழுப்புரம்: இயற்கை உபாதை கழிக்க சென்றவர் பலி!

விழுப்புரம்: ஆலகிராமத்தை சேர்ந்த அருள் குமார் (32), நேற்று அதிகாலை, இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து அவரை பிணமாக மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 27, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவல்துறையின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


