News September 11, 2025
விழுப்புரம்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. உஷாராக இருங்கள். ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 11, 2025
விழுப்புரம்: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

விழுப்புரம் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News September 11, 2025
அன்புமணி நீக்கம் – ராமதாஸ் விளக்கம்

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் படி, அக்கட்சிக்கு எதிராக செயல்பட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அவர் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கும் அன்புமணி எந்த பதிலும் அளிக்காததால், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாகவே கருதப்பட்டு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்
News September 11, 2025
ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து அன்புமணி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பானது வழங்கப்பட்டுள்ளது.